சட்டங்களுக்குட்பட்ட  பிரஜாவுரிமையும்¸
திணைக்களத்துக்குட்பட்ட ஆள்பதிவும்

நீக்கப்பட வேண்டும்.
(யாப்பு சீர்திருத்தத்துக்கான தனி நபர் பிரேரணை)

- மு.சிவலிங்கம் -  முன்னாள் ம.ம.மு. செயலாளர் நாயகம்


புதிய அரசியல் யாப்பு திருத்தத்துக்கான தனி நபர் பிரேரணையாக முன் வைக்கப்பட்ட எனது பத்து பிரேரணைகள் பற்றி இக்கட்டுரை விளக்கமளிக்கிறது.. 

01. அரசியலமைப்பின் பிரகடனத்துக்கப்பால் 1948 முதல் 2009 வரையில் அமுலில் இருக்கும்  பதினொரு வகை பிரஜா உரிமைச் சட்டங்கள் நீக்கப்படல் வேண்டும். 

இப் பிரேரணை பற்றிய விளக்கமாவது -:  1948 ம் ஆண்டு 18 ம் இலக்கப் பிரஜா உரிமைச் சட்டம்¸ மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்தது. 1946 ம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழு தயாரித்த அறிக்கையும் இச் சட்டத்தினால் நிராகரிக்கப்பட்டது. இச் சட்டத்தால் இந்திய வம்சாவளி  தமிழர்கள் நாடற்றவராகினர். இதன் பின்னர் 1949 ம் ஆண்டு 48 ம் இலக்க இலங்கை பாராளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டு குடியுரிமையை இழந்தவர்களுக்கு  வாக்குரிமை வழங்கும் உரிமையும் மறுக்கப்பட்டது. 


மேலும் படிக்க....

வெந்து
தணிந்தது
காலம்...
-  மு.சிவலிங்கம்

அந்த மாமரம்¸ ஆல மரத்தைப் போல அடர்ந்து¸ படர்ந்து விரிந்திருந்தது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து ஓய்ந்திருக்கும் காலம். இப்போது வெய்யிற் காலமாகியும் புழுதி பறக்காமல் ஈர நிலம் எங்கும் வியாபித்திருந்தது. மரத்தில் புதிய தளிர்கள் துளிர்த்து¸ பச்சைப் பசேலெனச் செழித்திருந்தன. காற்றில் சலசலக்கும் இலைகளும்¸ கிளைகளும் குளிர்ந்தக் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. அந்த மரமே அங்கு தவித்திருக்கும் அகதிக் குடும்பங்களுக்கு கூரையாக¸ வீடாக¸ ஊராக¸ பாதுகாப்பாகக் குஞ்சுகளை இறக்கைக்குள் அணைத்து வைத்திருக்கும் பேடாக ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. நெருப்பாய் எரிக்கும் வெய்யிற் காலங்களில் சுகமான நிழலைக் கொடுக்கின்றது. சுகமான குளிர்ந்தக் காற்றை¸ அனலாய் தகித்துக் கொண்டிருக்கும்அவர்களைத் தழுவி சுகம் கொடுக்கிறது. மாமரக் கிளைகளில் தொங்கும் தொட்டில்களில் தங்கள் தலைவிதிகளை மறந்து¸ அகதிக் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதக் கொடூரங்களால் துவம்சம் செய்யப்பட்ட இன்னொரு மனிதக் கூட்டத்துக்கு¸ அந்த இயற்கையின் இரக்கம் அருள் பாலித்துக் கொண்டிருந்தது….. பழம்பெரும் இந்த மாமரம்¸ ஆல மரமாகவிருந்திருந்தால்¸ அரண்மனைத் தூண்களாய் விழுதுகளை இறக்கி¸ நாலா புறமும் பூமியில் பதிந்திருக்கும்.

ஆள் அரவமற்ற இந்தக் காட்டுப் பாதையின் ஓரத்தில் இப்படியொரு மரமிருப்பதற்கானக் காரணம் பின்னர்தான் தெரிய வந்தது. இது காட்டுப் பிரதேசமல்ல.. பூர்வீகமாக மக்கள் குடியிருந்த ஓர் ஊர்… தூர்ந்து போன கிராமம்… மாமரத்தின் அருகிலே குண்டுகளுக்கு இறையான பெரிய கோவில் இருந்ததாம்..  கோவில் இருந்த அடையாளத்திற்குச் சாட்சி சொல்லுமுகமாக மூலஸ்தான திண்ணை கொஞ்சம் பட்டும் படாமல் தெரிகின்றது. கொஞ்சத் தூரத்தில் துப்பாக்கிக்காரர்களின் கூடாரங்களில் அழகழகான தேர்ச் சில்லுகள்  ரசனைக்காக வைக்கப்பட்டிருந்தன.  யுத்தம் எரித்த எத்தனை கோவில்களின் தேர்ச்சில்லுகள் இப்படி காட்சிப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன..? 

மேலும் படிக்க....

உயிர்ப் பிச்சை…
                       - மு.சிவலிங்கம்
'ரதி..! ரொம்ப தூர பயணமா...?"

'இல்ல மாமா...! ஆஸ்பத்திரிக்குத்தான் போறேன்..!"

'தனியா போகாமே வீட்ல யாரையும் கூட்டிக்கிட்டுப் போகலாந்தானே..?”

“தம்பி ஸ்கூலுக்குப் போயிட்டான்.. அம்மா வீட்டு வேல செய்யணும்.. அப்பாவுக்கு கஷ்டம் குடுக்க விருப்பமில்ல…” அவளின் வருத்தம் நிறைந்த முகத்தில் சிறு புன்னகை இழையோடியது.

‘எவ்வளவு அழகான பொண்ணு…? எப்படி இருந்த பொண்ணு..? தக்காளிப் பழம் மாதிரி இருந்தவளாச்சே..! இப்ப… கருத்துப் போயி.. இந்த வயசுல ஒடம்பு தளர்ந்து… ச்சே… கடவுள் இப்பிடி சோதிக்கலாமா…?” சீரங்கன் மாமா ரொம்பவும் வருத்தப்பட்டார். 

மேலும் படிக்க....

கேட்டிருப்பாயோ.. காற்றே..!
- மு.சிவலிங்கம்

இவ்வளவு காலமும் சிங்களச் சண்டியர்கள்தான் வீடுகளுக்கு நெருப்பு வைத்து¸ தமிழர்களை விரட்டித் துரத்திய சம்பவங்களைப் பார்க்க முடிந்தது.. இப்போது... தமிழ்ச் சண்டியர்கள் தமிழர்களின் வீடுகளுக்கு நெருப்புவைத்து¸ அடித்துத் துரத்துவதைப் பார்த்த வேலாயுதம் மாஸ்டரின் கண்கள் நம்ப மறுத்தன.. அச் சம்பவம் கனவில் நடப்பதாக நினைத்துக் கொண்டிருந்த அவரின் சட்டையைப் பிடித்து ஒருவன் இழுத்துத் தள்ளும்போதுதான் சுய உணர்வு வந்தது...! நடப்பது உண்மை சம்பவமே என்று.. விழுந்தவர் எழுந்து மெதுவாக நடந்தார்....

சக தமிழனிடம் அப்படி அடி வாங்குவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. உடலில் ஏற்பட்ட வலியை விட மனதில் அடிபட்ட வலியை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை..

மேலும் படிக்க....

"பேப்பர் பிரஜைகள்..."   -  மு.சிவலிங்கம்

("மலைகளின் மக்கள்"   சிறுகதை தொகுப்பில் இருந்து...)

இன்றைய இரவு விடிந்தால்… நாளை சுப்பையா கொழும்புக்குப் பயணம்…!


இரவு முழுக்க பார்வதியம்மாள் தூங்கவேயில்லை. “நான் வளத்த செல்லக்கண்ணுக்கு உத்தியோகம் கெடச்சிருக்கு கொழும்பு தொறை முகத்துல கிளாக்கர் வேல… இந்தத் தோட்டத்துக் கணக்கப்புள்ள ஐயாவை… நானும் பாத்துக்கிறேன் என் மவன் படிக்கிறதப் பாத்து கேலி பண்ணினாரே..? அவருக்கிட்டேயே போயி எம்மவனை பயணஞ் சொல்ல வைக்கிறேன்.” இப்படி அந்த தாய் உள்ளம் மகனுக்கு உத்தியோகம் கிடைத்து விட்ட பெருமையில் “வீம்பு” பேசிக் கொண்டிருந்தது உண்மைதான்.


சாதாரண ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன் படித்து¸ நன்றாக உடுத்திச் செல்வதைப் பார்ப்பதில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ரொம்பவும் சங்கடப்படுவார்கள்.


“லயத்துப் பொடியனை பாரு?” என்று ஏளனமாக கதைப்பார்கள்.


மேலும் படிக்க....



கரிகாற்சோழன் விருது Murugan Sivalingam - Sri LankaMurugan Sivalingam at Colombo Tamil Sangam
சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக் கட்டளையும்¸ தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகமும் இணைந்து படைப்பாளர் மு.சிவலிங்கத்தின் வரலாற்று நெடுங் கதைக்கு கரிகாற்சோழன் விருது வழங்கி கௌரவித்தது. இந் நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடந்தேறியது. இவ்விரு அமைப்புகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.


புகைப்படங்கள்

Panjam Pilaikka Vanda Seemail - Mu Sivalingam

"பஞ்சம் பிழைக்க வந்த சீமை"  -  மு.சிவலிங்கம்

Mailagalin Makkal - Murugan Sivalingam
                                                               

"மலைகளின் மக்கள்"  -  மு.சிவலிங்கம்

தனது "மகா ராவணா" நாவலுக்கு காலி பெயார்வே தேசிய விருது பெற்ற சிங்கள சிரேஷ்ட எழுத்தாளர் டெனிசன் பெரேராவுக்கு களனி பியகம வீதி சென்.திரேசா தேவாலய கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் மூலமாக பாராட்டு விழா நடைபெறுகின்றது. சிங்கள இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த பெருமகன் டெனிசன் பெரேராவை தமிழ் வாசகர் உலகம் மனமுவந்து பாராட்டுகின்றது.
படத்தில் (இடமிருந்து வலம் - டெனிசன் பெரேரா¸ மு.சி¸ கமல் பெரேரா.

මහා රාවණා නව කථා පොත සදහා ගාල්ල ෆෙයාර්වේ ආයතනයෙන් හා රාජ්ය සම්මානලාභී ප්‍රවීන ලෙඛක ටෙනිසන් පෙරෙරා මහතාට ශ්‍රී ලoකා ලෙඛක සoගමය කැළනියෙ , බියගම පාර සෙන් තෙරේසියා දෙවාලයෙදි අද දින 2.30 pm උපහාර උත්සවයක් පවත්වයි. දෙමළ පාඨක ලොව එතුමාට ගෞරවනීය උපහාරය පුදකරයි. (Writer Tennisen Perera, M.Sivalingam, Kamal Perera are seen here)
Tennisen Perera, M.Sivalingam, Kamal Perera are seen here)


ரூபவாஹினி தொலைக்காட்சி நேர்காணல்

https://youtu.be/qeL9wYGlLGg
https://youtu.be/qeL9wYGlLGg


https://www.youtube.com/watch?v=R9zK9iErhNM&fbclid=IwAR1lu1sr9zhwgbSlj-yyhAhibBIuuEK5ganG1HO1zityytYoW3ljjJ0HFME

The Indian origin Tamils in Sri lanka do not possess national identification yetThey name themselves as "Sri Lankan Tamil", "Indian Origin Tamil" and "Malayaga Tamil". This situation confuses their census statistics annually.  The present statistics say (1981-2011) that their total count is 800,000, where the actual population is supposed to be more than 1.5 million. This mess to be corrected immediately to safeguard their actual population.



இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் 2011 ம் ஆண்டு குடிசனத் தொகை மதிப்பீடு பற்றி விமர்சிக்கப்பட்ட இரண்டு ஆய்வு கட்டுரைகளை கடந்த சில வாரங்களில் வெளியான தேசிய பத்திரிக்கைகளில் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவை பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கட்டுரையை எழுதுகின்றேன்.

ஓன்று, ஜனவரி மாதம் 13 ம் திகதி வெளிவந்த “சன்டே லீடர் பத்திரிக்கையில் “Up  country Tamils,  The Vanishing people?” என்ற கட்டுரையாகும்.   இந்த கட்டுரை   புது டெல்லியில் செயற்படும்   Observer Research Foundation   (ORF)  என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

இக் கட்டுரையைப் போன்றே 20 ம் திகதி ஜனவரி மாதம் வெளிவந்த ஞாயிறு வீரகேசரியில்  கலாநிதி எஸ்.சந்திரபோஸ் அவர்கள் எழுதிய “மக்கள் தொகை கணிப்பீடும், மறைந்து செல்லும் இந்தியத் தமிழர்களும்” என்ற கட்டுரையும் பல முக்கியமான தகவல்களை  எடுத்துக் காட்டியுள்ளன. 

குடிசனத் தொகை கணிப்பீட்டாளர்கள் இனவாரியாகத் தகவல் சேகரித்ததில், எந்த முறையைக் கையாண்டுள்ளார்கள்  என்பது முக்கிய அவதானத்துக்குரிய விடயமாகும்.  இந்தக் கணிப்பீட்டை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளாத முதல் கட்டுரையாளர் புள்ளி விபரங்கள்  முற்றிலும் பொய்யானவை  என்று ஆதங்கப்பட்டு எழுதியுள்ளார். 2011 ம் ஆண்டுக்குர்pய புள்ளி விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவை  எவ்வாறு தகவல்கள் தந்துள்ளன என்பதை கவனிப்போம்.

1981 ம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரையிளான  30 ஆண்டுகளுக்குரிய விபரக் கோவையாக இந்தத் தகவல்களை நாம் அறிகின்றோம்.. இந்த முப்பதாண்டு கால வளர்ச்சியில் இலங்கையின் மொத்த சனத் தொகை 20,263723 (இரண்டு கோடியே இரண்டு லட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று இருபத்து மூன்று)  என காட்டப்பட்டுள்ளது.

இத் தொகையில் இன வாரியாகக் காட்டப்பட்டுள்ள விபரங்களை அறியும் போது, சிங்கள மக்களின் குடிசனத் தொகை  1981 ம் ஆண்டில்  10,979400 (ஒரு கோடியே ஒன்பது லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து நானூறு) ஆகவும் 2011 ம் ஆண்டில்  15இ173800  (ஒரு கோடியே ஐம்பத்தொரு லட்சத்து எழுபத்து மூவாயிரத்து எண்ணூறு)    ஆக வளர்ச்சியடைந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.   அதன்படி கடந்த முப்பதாண்டு காலப் பகுதியில் 4,194400 (நாற்பத்தொரு லட்சத்து தொண்ணூற்று நாலாயிரத்து நாணூறு)  பேர் இயற்கை வளர்ச்சியை கொண்டுள்ளனர் எனக் காட்டப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் வளர்ச்சியை 1981 ம் ஆண்டு 18,86900 (பதினெட்டு லட்சத்து என்பத்தாறாயிரத்து தொள்ளாயிரம்) ஆகவும், 2011 ம் ஆண்டு 22,70900 (இருபத்திரண்டு லட்சத்து எழுபதாயிரத்துத் தொள்ளாயிரம்)  என வளர்ச்சிப் பெற்றுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.  

அடுத்து முஸ்லிம் மக்களின் குடிசனத் தொகையைக் காட்டும் போது, 1981 ம் ஆண்டு 10,46900 (பத்து லட்சத்து நாற்பத்தாறாயிரத்து தொள்ளாயிரம்)  எனவும்  2011 ம் ஆண்டில் 18,69800 ( பதினெட்டு லட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து எண்ணூறு)  என்றும், அதன்படி 8,22900       (எட்டு லட்சத்து இருபத்திரண்டாயிரத்துத் தொள்ளாயிரம்)  பேர் இயற்கை வளர்ச்சி கொண்டுள்ளனர் எனக் காட்டப்பட்டுள்ளது. 

அடுத்து, இந்திய வம்சாவளி தமிழர்கள் 1981 ம் ஆண்டு 8,18700 (எட்டு லட்சத்து பதினெட்டாயிரத்து எழுநூறு) பேர் என்றும்  2011 ம் ஆண்டில்  8,42300 (எட்டு லட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூறு)  என்றும், அதன்படி  23,600 (இருபத்து மூவாயிரத்து அறுநூறு) பேர்கள் மட்டுமே கடந்த முப்பதாண்டுகளில்  இயற்கை வளர்ச்சி பெற்றுள்ளனர்  என்று காட்டப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பீட்டை எவ்வாறு ஏற்றுக் கொள்வது..?  இக் கணிப்பீட்டின்படி முப்பதாண்டு கால இயற்கை வளர்ச்சியில் 2.8மூ வீதமாகவும், மொத்த சனத் தொகையில் 4.2மூ ஆகவும் குறைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் கடந்த கால வளர்ச்சி வீதத்தை கீழே அவதானிக்கலாம். :

1945 ம் வருடம்  16%
1953 ம் வருடம்  12%
1963 – 1983 வரை 10.6% ,  9.4% ,  5.6%

இந்த வளர்ச்சியினை நோக்கும் அதே வேளை, 1953 ம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களைவிட குடிசனத் தொகையில் அதிகமாகவிருந்தனர்  என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது.
2011 ம் ஆண்டு குடிசனக் கணக்கீட்டின்படி கடந்த முப்பதாண்டு கால வளர்ச்சியாக இந்த “23,600 பேர்”; எவ்வாறு சேகரிக்கப்பட்டனர் என்பது வியப்புக்குரிய கேள்வியாகும். கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த யுத்தத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர்; வெளி நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர்  காணாமல் போயினர். அநேகமானோர் வசிப்பிடமின்றி எந்த வித தகவல்களுக்கும் அகப்படாமல் மறைந்து கிடக்கின்றனர்.  இந்த நிலைமையில்  இன்றைய கணக்கீட்டின்படி   22,70900 பேர் இருப்பதாகக் கொடுக்கப்பட்டிருக்கும்  தகவல்  ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. இந்திய வம்சாவளித் தமிழர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்து கொண்டதன் காரணமாக, இலங்கைத் தமிழர் பட்டியலில் அவர்களது தொகை சேர்க்கப்;பட்டிருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இல்லையெனில் ஏறக்குறைய பதினைந்து லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களுள் ஏழு லட்சம் பேர் எங்கே மறைந்தனர் என்ற அதிர்ச்சிக்குரிய கேள்விக்கு விடை தேட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த குழப்ப நிலைக்குக் காரணம், மலையகத் தமிழர் என்ற தேசிய அடையாளத்தையும், இந்திய வம்சாவளி என்ற அடையாளத்தையும், இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தையும் மூன்று வௌ;வேறு நிலைப்பாட்டில் வைத்து இந்த சமூகத்தினர் தங்களை குழப்பிக் கொண்டிருப்பதேயாகும்..! இருநூறு ஆண்டுகளாகியும் தங்களது தேசிய அடையாளத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியாத இம் மக்களின் அரசியல் அறியாமை விசனத்துக்குரியதாகும்.

இச் சமூகத்தினர் பெருந் தோட்டத் தொழிலாளர்களாகவும், தலை நகரில் குடியேறியுள்ள வர்த்தக சமூகத்தினராகவும், ஆரம்ப காலம் முதல் கடை சிப்பந்திகளாகவும் வியாபாரத் தளங்களை அண்டியுள்ள ஊழியர்களாகவும், நகரத் தொழிலாளர்களாகவும் , பல துறைகளில்  தங்களை நிலைநாட்டிக் கொண்டவர்கள், தங்கள் விருப்பத்துக்கேற்ற தேசிய அடையாளங்களை அவ்வப்போது காட்டி வருகின்றனர். இவர்களது நிலைப்பாட்டில் எந்தவொரு அரசியல் சிந்தனை இல்லாமையும் இந்த நிலைமைக்கு காரணமாகும்.
கலாநிதி எஸ்.சந்திரபோஸ் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போன்று இந்தியத் தமிழர்கள் என்றதும் அவர்கள் பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் இவர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. பெருந் தோட்டங்களைத் தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்றவர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர்.

கொழும்பைப் போன்ற தலை நகரங்களில் வாழும் வர்த்தக சமூகத்தினர் இந்தியாவிலும் சொத்துரிமைகள் கொண்டு  வியாபாரத் தொடர்புகளும்  வைத்துள்ளவர்கள் தங்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றனர். கோபியோ (Gopio) போன்ற ஸ்தாபனத்திலும் இவர்கள் நெருக்கமான உறுப்பினர்களாகவிருப்பதையும் நாம் அவதானிக்க முடிகின்றது.  இவர்களைத் தவிர்ந்த ஏனைய நகர்ப்புறங்களில்  குறிப்பாக கொழும்பு, நீர் கொழும்பு, புத்தளம், சிலாபம், மன்னார் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினர் தங்களை இலங்கைத் தமிழர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புகின்றனர்.
இந்த இரு சாரார்களும் எந்த வித காரணத்தையும் முன்னிட்டு மலையகத் தமிழர் என்ற தேசிய அடையாளத்தின் கீழ் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவதில்லை. மலையகத் தமிழர் என்ற அடையாளம் பெருந் தோட்ட மக்களையே சார்ந்தது என்ற அபிப்பிராயத்தில் இருந்து வருகின்றனர் .பெருந் தோட்ட மக்களோ இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னா,; தாங்கள் முகங் கொடுத்த அரசியல் பிரச்சினைகளை படிப்பினையாகக்கொண்டு, தங்களை மேலும் இந்த நாட்டில் “இந்தியத்  தமிழர்”; என்ற அடைமொழியோடு அந்நியப்படுத்திக் கொண்டு வாழ விரும்ப வில்லை. 

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக  இந்த நாட்டில் வாழ்ந்துக் கொண்டு,  “இந்திய” என்ற இன்னொரு நாட்டின் பெயரை அடைமொழியாக  இணைத்துக் கொள்வதன் மூலம், தேசிய அந்தஸ்தை பெற முடியாது என்பதில் தெளிவாக இருந்து வருகின்றனர்.   சுதந்திரத்துக்குப் பின் இன்று வரை  65 ஆண்டுகளாக மலையகத் தமிழர் என்ற  தேசிய அடையாளத்தை தேசிய , சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். சர்வதேச சமூகமும் மலையகத் தமிழர் ஒரு தனியான  தேசிய சிறுபான்மை இனம் என்பதை அங்கீகரித்துள்ளன.

இந்த நிலைப்பாட்டுக்கான சான்றுகளை  இணைய தளங்களில் பரவலாக நாம் கண்டு கொள்ளலாம். மலையகத்  தொழிற்சங்க, அரசியல் தலைமைகளும், அரச சார்பற்ற சமூக நிறுவனங்களும், மலையகம் வாழ் அனைத்து சமூகப் பிரிவினர்களும் இந்த அடையாளத்தையே தங்களது தேசிய இன அடையாளமாக ஏற்றுக் கொண்டு வருகின்றன. களுத்துறை, மத்துகம, காலி, தெனியாய போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற பெருந்தோட்ட மக்களும் இந்த நிலைப்பாட்டினையே கொண்டுள்ளனர்.

அரசியலில் நேரடியாகப் பங்குகொண்டு, இரண்டாவது தேசிய சிறுபான்மை இனமாக இருந்து, பின்னர் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டு, இன்று நான்காவது தேசிய சிறுபான்மை இனமாக வீழ்த்தபட்டிருந்தாலும,; மலையகத் தமிழர் என்ற அடையாளம் நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை  நாம் எற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகையினால் மலையக மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  “இந்தியத் தமிழர்”; என்ற அடையாளத்துக்குப் பதிலாக , “மலையகத் தமிழர்” என்ற தேசிய அடையாளத்தை  கொண்டு வரும் ஒரு திருத்தப் பிரேரணையை நாடாளு மன்றத்தில் முன் வைக்க வேண்டும். இந்த தேசிய அடையாளத்தின் கீழ் தங்களையும் இணைத்துக் கொள்வதற்கு, நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் முன்வர வேண்டும் என்ற அரசியல் விழிப்புணர்வை அவர்களிடம் உருவாக்க வேண்டும். இந்திய வம்சாவளி தமிழர்களில்  பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் மலையகத் தமிழரின் அரசியல் நிழலில் அண்டி வாழ வேண்டிய கட்டாய நிலைமை எதிர் காலத்தில் இவர்களுக்கு ஏற்படும் என்ற உண்மையையும் உணர்த்த வேண்டும்.

இந்த இன அடையாளத்தின் மூலம்  தேசிய  அரசியலிலும், சர்வ தேசிய அரசியலிலும் நமது உண்மையான குடிசனத் தொகை மதிப்பீட்டை காட்டிக் கொள்ள முடியும். என்றும் இல்லாதவாறு தேசிய இனவாதம் கூர்மையடைந்து வருவதையும், சிங்கள பௌத்த பேரினவாத அடிப்படைவாதிகளின்  சக்தி பல வழிகளிலும் வளர்ச்சியடைந்து வரும் பேராபத்தையும், தங்களது  தேசிய அடையாளத்தில் முரண்படும் தமிழர்கள் உணர வேண்டும்.

இந் நாட்டின் பூர்வீகக் குடிகளான வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற தமிழர்கள் தங்களது பூர்வீக நிலத்தையும், வீடு, உடைமைகளையும் இழந்து, விரட்டப்பட்டு அகதி முகாம்களிலும் கூட இல்லாமல், காடுகளில்  வசிக்கும் நடைமுறை நிலைமைகளை, சொந்த காணி, நிலம், வீடு உடைமைகள் இல்லாது உதிரிகளாக சிதறி வாழும் இவர்கள், தேசிய அடையாளத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இல்லாது போனால்,  பர்மாவில் நடந்தது போன்று, இன்று மலேசியாவில் நடந்து கொண்டிருப்பது போன்று இந்திய எதிர்ப்புவாத நடவடிக்கைகள் எந்த சந்தர்ப்பத்திலும் இங்கே உருவாகலாம்.

குடிசன மதிப்பீட்டுத் திணைக்கள ஊழியர்களிடம் தமது தேசிய அடையாளத்தை முறையோடு வழங்கத் தவறியதால், பாதகமான முறையில் 2011 ம் ஆண்டில் எமது குடிசனத் தொகை குறைக்கப்பட்டிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இனங்களின் சனத்தொகைக்கேற்ப பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், முன்னுரிமைகள், அங்கீகாரங்கள், விகிதாசாரத்துக்குரிய தொழில் வாய்ப்புகள்,  எனும் பல தேசிய நலன்களை இழக்க நேரிடலாம். இவ்வாறான  அரசியல் ரீதியிலான பாதிப்புக்கள் பற்றியே மேற் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர்கள் அறியத் தந்துள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் மலையகத் தமிழர்களின் இவ்வாறான சமூக, அரசியல் தகவல்களை , சமூக நலன் விரும்பிகள் பகிர்ந்து கொள்வது  மிக முக்கியமான அரசியல் பணிகளிலொன்றாகும். 



Mu Sivalingam with Writer Raja Narayanan India
புதுச்சேரியில்  மூத்த எழுத்தாளர்  கி.ராஜநாராயணன், பசுமை இயக்கம் டாக்டர் ஜீவானந்தம், பேராசிரியர் அமரநாதன், பொறியியலாளர்  மனோகரன் ஆகியோர் மு.சி யின் சிறுகதை தொகுப்பொன்றை வெளியிடுவதற்கு ஏற்பாடு  செய்துள்ளனர் .
writer sivalingam-writer-raja narayanan


Malayaga Tamilar Naatupura Padalgal - Folks Songs- M.Sivalingam
  • பதிவிறக்கம் செய்ய (Download)....
  • Online இல் வாசிப்பதற்கு...                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           
"மலையகத் தமிழர் நாட்டுப்புற பாடல்கள்" -  மு.சிவலிங்கம்


"ஒரு விதை நெல்" -  மு.சிவலிங்கம் 

Opparikochi - Murugan Sivalingam


"ஒப்பாரிக்கோச்சி" -  மு.சிவலிங்கம்

Theyilai Desam - Murugan Sivalingam
"தேயிலை தேசம்" -  மு.சிவலிங்கம்

Venthu Thaninthadhu Kaalam - Murugan Sivalingam


"வெந்து தணிந்தது காலம்"  -  மு.சிவலிங்கம்

16.10.2008
Hon. Members of Parliament

அவசர வேண்டுகோள்.


தமிழகத்தில் வாழும் மலையக அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை வழங்கும் சட்டமூலமும் சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பமறிதலும்..

Bill on granting Sri Lankan citizenship to Indian origin Tamil refugees in Tamil Nadu refugee camps..

இலங்கை நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் முன் வைக்கும், தமிழகத்தில் தங்கியுள்ள 28,500 அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பிரேரணையின் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த பிரேரணையின் சட்ட மூலம் நல்ல நோக்கத்தின் பெயரில் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்படலாம்.. அல்லது வாத பிரதி வாதங்களுக்குள்ளாகலாம்.

இன்று, வட கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் கடந்த 30 ஆண்டுகளாக இந்திய அரசின் உதவியுடன் வாழ்ந்து வருவது பலரும் அறிந்த விடயமாகும்.;  இலங்கை அகதிகள் தமிழ் நாடு முழுவதும் பரவலாக அமைந்துள்ள அகதி முகாம்களில் சிதறி வாழ்ந்து வருகின்றனர்.. அகதிகளாகச் சென்றவர்களில் பலர் தமிழகத்திலிருந்தே வெளி நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.. பலர் சுமுக நிலை ஏற்பட்டதும் இலங்கை திரும்புவதென்ற மன நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.. 

இவர்களில் இன்று 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்களாக அங்குள்ள 118 முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். 1977 களில் ஏற்பட்ட ஜூலை இனக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற மாவட்டங்களில் குடியேறி வாழ்ந்தனர். இம் மக்கள் யுத்தத்தின் தாக்கத்தினால் நிர்க்கதியாகி தமிழகம் சென்றவர்களாவர்.. 30 வருடங்கள் வாழ்ந்து முடிந்த கால எல்லைக்குள் ஒரு புதிய பரம்பரை உண்டாகியுள்ளதையும் நாம் அறிதல் வேண்டும்.

எனது அவதானிப்பின்படி அங்கு வாழும் இளைய சந்ததியினருக்கு, தாங்கள் இலங்கையைச் சார்ந்தவர்கள் என்றோ, இலங்கை யுத்த அகதி என்றோ, சரித்திரப் பின்னணி எதுவும் தெரியாது. தங்களை இந்தியர்களாகவே நினைத்து வாழ்ந்து வருகின்றனர்.

மனிதர் வாழ்வில் 30 ஆண்டுகள் என்பது ஒரு அறை நூற்றாண்டில் காலடி வைக்கின்ற காலமாகும். இங்கு பெற்றோர்கள் நிர்க்கதி நிலையோடு வந்து விட்ட பின்னர் ஏற்பட்ட இயற்கைப் பெருக்கமும், குழந்தைகளோடு வந்தவர்களின் வளர்ச்சியும் ஒன்று சேர்ந்து புதிய பரம்பரையினரின் தோற்றமும் ஏற்பட்டுள்ளது.. அகதி முகாம்களில் வாழ்கின்ற இளைய பரம்பரையினர் வளர்ந்து, கணிசமான அளவு உயர் கல்வி பட்டம் பெற்றவர்களாகவும் (M.A.,  M.Sc.)  பலர் டாக்டர்களாகவும்;> (M.B.B.S) உருவாகியுள்ள சமூக மாற்றங்களையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

அதிகமானோர் தனியார் வர்த்தக நிலையங்களில், தொழிற்சாலைகளில்  நிலையான உத்தியோகங்கள் செய்து வருகின்றனர். தொழிலாளர் நிலையிலுள்ளவர்கள் சென்னையைச் சார்ந்த திரிசூலம், சென். அந்தனிஸ் மலை பிரதேசங்களில் கல் உடைப்பவர்களாகவும், பெரிய நகரங்களில் பழைய கட்டிடங்களை உடைப்பதிலும், ஈயத் தொழிற்சாலைகளில் ஈய உருண்டைகள் உருட்டும் தொழில்களையும் செய்து வருகின்றனர்..  இவர்களுக்கு இலங்கைக்கு திரும்ப வேண்டிய நினைப்போ, பாரம்பரிய நிலம், வீடு, சொத்துக்களைக் கொண்ட வட கிழக்குத் தமிழர்களைப் போன்று இலங்கை திரும்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ, லட்சியமோ கிடையாது.. இந்த புதிய பரம்பரையினரின் பெற்றோர்கள் வட கிழக்கில் குடியேறி,  வீடு, நிலம், விவசாயக் காணி என்று சொத்துடமைக் கொண்டவர்களல்ல. 

இவர்கள் 30 ஆண்டுகள் தமிழகத்தில் வேரூன்றி விட்டவர்கள். தொழிலிலும், வாழ்க்கையிலும் நிரந்தர நிலையை உருவாக்கிக் கொண்டு, தமிழக வாழ்க்கை முறைக்கு தங்களை மாற்றியமைத்துக் கொண்டவர்கள்.  இவர்களின் விருப்பு வெறுப்புக்களை தனித் தனி குடும்ப உறுப்பினர்களாக  சந்தித்து, அல்லது, ஒருமித்து அவர்களை அழைத்து,  அவர்களின் மன நிலையை  அறிந்த பின்னரே, அவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்கும் நல்ல காரியம் ஒரு தீர்க்க தரிசனமான வேலைத் திட்டமாக அமையலாம். அதுவன்றி,  இவர்கள் நாடற்றவர்கள், இவர்களுக்கு ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்த தேசிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவு சிக்கலை ஏற்படுத்தலாம். இந்த நோக்கம் 1964 ல் சிறிமாவும், சாஸ்திரியும் செய்து கொண்ட பிழையான வரலாற்றுத் திருப்பத்தைப் போல் அமைந்து விடக் கூடாது..! அன்று சிறிமா –  சாஸ்திரி, சிறிமா - இந்திரா ஆகிய இலங்கை, இந்திய பிhதமர்கள் தன்னிச்சையாகச் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலம் பல விபரீதங்கள் நடந்தன. ஒப்பந்தத்துக்குள் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் சமூகப் பிரதிநிதிகளிடம் இவ்விரு நாட்டுத் தலைவர்களும் கலந்தாலோசிக்க வில்லை. இந்த ஒப்பந்தமும், இந்த ஒப்பந்தத்தால் ஏற்பட்ட சட்டமும் மக்களின் மனித உரிமை பிரச்சினையாக அல்லாமல், ஒரு அரச நிர்வாக வேலையாகவே ஆகிப் போனதை நாம் அறிய வேண்டும்.

மலையகத் தமிழரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களான 1948 ல் நடந்த குடியுரிமை பறிப்பு சட்டத்தின் போதும்,  மலையகத் தலைமைகள் வாளாவிருந்தன. 1964 ல் இலங்கை - இந்திய மக்கள் பங்கு பிரிப்பு ஒப்பந்தத்தின் போதும் வாளாவிருந்தன. இன்று வரை மலையகத் தமிழர்கள் இந்திய – பாகிஸ்தானிய 1949 ம் ஆண்டு 3 ம் இலக்க குடியிருப்பாளர் சட்டத்தின் கீழ்
(The Indian  and  Pakistani Residents(Citizenship) Act No.3 of 1949)   சர்டிபிக்கேட் வைத்துக் கொண்டு குடிகளாக இன்றி(Citizen) குடியிருப்பாளராக (Tenant) ஆப்பிரிக்கர் (Mode of African Pass) “பாஸ்” முறை வைத்திருந்ததைப் போல அரசியல் பேதமையில் வாழ்;ந்து வரும்  நிச்சயமற்ற தேசியத்தை நாம் கொண்டுள்ளோம்..

ஆகவே, இந்திய அகதி முகாம்களில் வாழும் மக்களிடம் அவர்கள் இந்திய குடிகளாக விரும்புகின்றார்களா..? இலங்கைக் குடிகளாக விரும்புகின்றார்களா..? என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு ஆய்வு கணிப்பீட்டை (Study survey) ஏற்படுத்திக் கொள்வதே முதல் அடிப்படை முயற்சியாகும்.. இன்றைய மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அகதி மக்களைச் சந்தித்து, அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து, டெல்லி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினால், அந்த அரசு செவி மடுக்கலாம். 120 கோடி குடிசனத் தொகையை அடையவிருக்கும் இந்தியாவுக்கு, 28500 மக்களை ஏற்றுக் கொள்வது ஒரு பொருட்டாக இருக்காது..

இந்தச் சமயத்தில் ஏற்கனவே நாடற்றவர்களாக மிஞ்சியிருந்த மலையகத் தமிழருக்கு, மக்கள் விடுதலை முன்னணியினர் முழு ஆதரவைக் காட்டி, குடியுரிமைப் பெறுவதற்கு துணை நின்றதை வரலாறு மறுக்காது.. மறக்காது.. அது போலவே அவர்களது இன்றைய முயற்சியும், பிரேரணையும் வரவேற்க வேண்டிய இச் சமயத்தில், இந்த மக்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கி, இலங்கைக்கு அழைக்கும் பட்சத்தில், இவர்கள் இலங்கை அரசினால் மீண்டும் ஒரு புனர்வாழ்வு திட்டத்தின் மூலம் இலங்கையில் குடியேற்றப்படுவார்களா..? தொழில் செய்த பலருக்கு பர்மா அகதிகளைப் போல, அதே தொழில் வாய்ப்பு பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்படுமா..? அல்லது ஏற்கனவே இவர்கள் வட கிழக்கில் குடியேறி வாழ்ந்த இடங்களில் இன்றைய யுத்த சூழலில் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு குடியேற முடியுமா..?  அல்லது, இவர்களின் பாரம்பரிய தொழிலான பெருந்தோட்டத் தொழிலுக்குள்ளேயே மீண்டும் தள்ளப்படுவார்களா..? என்பவைகளைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்..

சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பங்களையும். நிலைப்பாட்டையும் அறிந்துக் கொள்ளாமல்ää ஒரு நாட்டின் பிரஜையாக்கிவிடுவதுää 1964 ம் ஆண்டு நடந்துவிட்ட வரலாற்றுத் தவறை மீண்டும் செய்வதாக அமையும்.  மற்றும் ஒரு மனித உரிமை மீறல் செயலாகவும் அமையும்..

ஆகவே மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டு வந்துள்ள பிரேரணையின் சட்டமூலத்தை அமுலாக்கும் நிலை ஏற்படுமாயின், அதை தற்காலிகமாக நிறுத்திவைத்து, சம்பந்தப்பட்ட அகதி மக்களின் விருப்பங்களை அறிந்த பின்னர், நமது அரசு செயல்பட வேண்டும் என்று, தங்களின் பாராளுமன்ற விவாதத்தின் போது உரையாடுவதற்கு, எனது கருத்தினையும் ஆலோசிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.


இப்படிக்கு,

Murugan Sivalingam
Ex. Councellor  & Deputy Chairman, Central Provincial Council..
Secretary, Plantation Tamils Social Forum.
No. 56, Rosita Housing Scheme, Kotagala.
T.P. &  Fax -    051 2223012
E.mail  - moonaseena@yahoo.com

15.02.2012

திரு.வி.தேவராஜ்,
பிரதம ஆசிரியர்,
ஞாயிறு வீரகேசரி


அன்புடையீர் வணக்கம்.

டாக்டர் சுப்பிரமணிய சுவாமியுடனான நேர்காணல்

இந்திய ஜனதா கட்சியின்; தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமியுடன் நடாத்திய நேர் காணல் சம்பந்தமாக இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன்.

அதிகளவில் சர்ச்சைக்குரிய அரசியல் அறிக்கைகள் எழுதியே பிரபல்யமடைந்த சுப்பிரமணிய சுவாமி, இந்தியாவிலும், சர்வதேச ரீதியிலும் பரவலாக அறிமுகமானவர். அவரது மிகவும் வெளிப்படையானதும், துணிச்சலுமானதுமாகிய பதில்களை உங்களது கேள்வி மூலம்  பெற்றிருந்தமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னரும், பின்னரும் தேசிய ரீதியில்  தனிமைப்படுத்தப்பட்ட சமூகமாகவே இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் இன்று வரை கணிக்கப்பட்டு வருவது ஓர் சர்வதேச கவனத்துக்குரிய அரசியல் விவகாரமாகும். இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் தேயிலை, ரப்பர், தென்னை உற்பத்தியில் பிரதான பங்களிப்பைச் செய்து வரும் ஒரு தொழிலாளர் பிரிவினராக  மலையகத் தமிழர்கள்  இருந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு தொழிற்சங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும்  குறிப்பிட்டு பேசும் அளவுக்கு தூர நோக்கு கொண்ட தலைமைகள்  இன்றுவரை உருவாக வில்லை என்பதை வருத்தமுடன் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

தேசிய ரீதியில் இந்த மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்வு நிலையை அவதானிக்கின்ற போது, மனித உரிமைகள் அத்தனையும்;  மறுக்கப்பட்ட மக்களாகவே   இம் மக்கள் இருந்து வருகின்றனர். இவர்களின் தலைமைகள் என்று மதிக்கப்படும் தொழிற்சங்கப் பிரமுகர்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் இன்று வரை இந்த மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட வில்லை.  தொழில் ரீதியிலான உரிமைகளையோ, தொழிலுக்கேற்ற ஊதியத்தையோ பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் வாழ்வதோடு, அரசியல் ரீதியில் காணி, நிலம், வீடு என்னும் தேசிய இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளக் கூடிய உரிமையையும்; பெற்றுக் கொள்ளவில்லை.

இந்த நாட்டில் இவர்களைத் தவிர்ந்த ஏனைய சமூகத் தலைமைகள் தங்களது இனத்துக்குரிய அடிப்படை உரிமைகள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்திருந்த போதும், இவர்கள் மட்டும்  வேடிக்கை மனிதர்களாக இன்று வரை தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தனது உரையாடலின் போது, தமிழக அரசியல்வாதிகள், இந்திய மத்திய அரசியல்வாதிகளின் கைக் கூலிகளாகவே செயற்படுகின்றனர் என்று தோலுரித்துக் காட்டி இருப்பதைப் போலவே, மலையக அரசியல்வாதிகளும் தங்களது சுய நலன்களுக்காக  ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக  இருந்து வருவதை நாம் அறிய முடிகின்றது.


எமது தலைமைகள் இந்த மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசுடன் பேசக் கூடியவர்களாகவும், அழுத்தம் கொடுக்கக் கூடியவர்களாகவும் இல்லாமல், தங்களது தகுதிகளை இழந்து கிடப்பதையும் நாம் உணர முடிகின்றது.

தமிழக அரசியல்வாதிகள் மக்கள் நலன்களை கெடுக்கும் துரோகச் செயல்களில் ஈடுபட்டதாக அறிய முடியவில்லை.  இந்த ஒரு அம்சத்தில் மலையக அரசியல்வாதிகள் அவர்களையும் மிஞ்சி இருப்பதை நாம் அறியலாம். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது சட்ட மன்றத்தில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை மத்திய அரசு விதிக்க வேண்டும் என பிரேரணை கொண்டு வந்து அதை மத்திய
அரசுக்கு சமர்ப்பித்திருந்தார். இந்தப் பிரேரணை மத்திய அரசையும், இலங்கை அரசையும் பயமுறுத்தியது. இந்த பிரேரணை சர்வதேச கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஆனால், மலையக அரசியல்வாதி ஒருவர் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க ஜெயலலிதா யார் என்று முதலறிக்கை விட்டிருந்தார். இவரைப் போன்றே இன்னுமொரு மலையக அரசியல்வாதி  ஐ.நா. நிபுணத்துவ கமிட்டிக்கு இலங்கை உள் விவகாரங்களில் தலையிட என்ன உரிமை இருக்கின்றது.. என்று முதலாவது அறிக்கை விட்டிருந்தார். இவர்கள் இவ்வாறு சிங்கள தலைவர்களுக்கு முன்பு முண்டியடித்துக் கொண்டு அறிக்கை விடுவதன் நோக்கம் பிரதியமைச்சர் பதவிகள் பெறுவதற்காகவே என்பது யாவரும் அறிந்ததே..!  இப்படி இருக்கும் போது, சுப்பிரமணிய சுவாமியைப் போன்றவர்களின் வெளிப்படையான அரசியல் பேச்சு மனதுக்கு நிம்மதியைக் கொடுக்கின்றது.

இந்திய வம்சாவளி தமிழருக்கு இந்தியா செய்த துரோகத்தை மிகவும் துணிச்சலாக இடித்;துக் காட்டியுள்ளார். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், சிறிமா - இந்திரா ஒப்பந்தம் போன்றவைகளால் இந்த மக்களை நாடற்றவர்களாக்கியது இந்தியாவின் முட்டாள்தனம் என்றும், இவ்வாறான ஒப்பந்தங்கள் செய்யாமல் இருந்திருந்தால், 40 பேர் வரையிலான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கலாம்  என்றும் கூறுகின்றார். இந்தியாவின் பச்சைத் துரோகம் நாளைய இளைய பரம்பரையினருக்கும் தெரிந்திருத்தல் அவசியம்.

இந்தியா, இலங்கையில் வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழருக்காகவும் பேச வேண்டும். ஆனால் இந்தியா, நடைமுறையில் அவ்வாறு நடந்து கொள்வதில்லை.  இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழரைத் தவிர்த்து, வட பகுதி தமிழ் மக்களுக்காக மட்டுமே பேசுவதாகத் தெரிகின்றது. என்று டாக்டர் சுட்டிக் காட்டி இருப்பதையும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய இந்த அரசியல் சூழலில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி  மக்களின் அரசியல் விவகாரங்கள் பற்றி ஆராய்வு செய்வதற்கு, சர்வ தேச மகாநாடு ஒன்றை தமிழ் நாட்டில் விரைவில் நடத்த இருப்பது, மலையகத் தமிழர்களைப் பொறுத்த அளவில் “ஒரு புத்தம் புதிய  முதல் அரசியல் காலடி” என்று உணர வேண்டியுள்ளது. இப்படியான ஒரு சர்வதேச மாநாடு இந்த மக்களின் 200 ஆண்டு கால மௌனத்தையும், உறக்கத்தையும்  கலைப்பதாக இருக்கும் என்றும் உணரலாம்.

இலங்கைத் தமிழரின் உரிமைகளை நோக்கிய அனைத்து அகிம்சைப் போராட்டங்களும் அவமதிக்கப்பட்டப் பின்னர், இளைய சமூகத்தினரின் இயக்கப் போராட்டங்கள் உருவெடுத்தன. ஒரு முப்பதாண்டு கால இந்தப் போராட்டம் சர்வதேச சமூகத்தினரின் கவனத்தை ஈர்த்தது. 200 ஆண்டு காலமாக தங்களுக்கு நடந்து வரும் அரசியல் ரீதியிலான அட்டூழியங்களையும், அவமானங்களையும் பொருட்படுத்தாமல், பாமரத்தனமாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு ஒரு மூன்றாவது மனிதரின் தலைமை வழிகாட்டவிருப்பது , இந்த காலத்தின் அதிஸ்டமாகும்.

இம் மாநாட்டில் கலந்துக் கொண்டு, அரசியல் தகவல்கள் சமர்ப்பிப்பதற்கு மலையகத்திலும், நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இருக்கும் அறிவு ஜீவிகளையும், சிவில் சமூகத்தினரையும், சமூக நலன் விரும்பிகளையும் கலந்துக்கொள்வதற்கு தாங்கள் முன் நின்று செயல்பட வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றேன். இலங்கை வாழ் இந்தியத் தமிழரின் தேசிய நலன்களைப் பெற்றுக் கொடுப்பதில் பிரித்தானிய அரசுக்கும், இந்திய அரசுக்கும் கடமையும், பொறுப்பும் இருக்கின்றது. வரலாற்று ரீதியாக இந்த இரண்டு நாட்டு அரசுகள் புரிந்த தவறுகளே  இந்த மக்களின் இன்றைய அரசியல், சமூகத் துயர நிலைமைகளுக்கு காரணங்களாகும். இந்த இரண்டு அரசுகளும் சர்வதேச பேச்சு வார்த்தை மேசைக்கு இழுக்கப்பட வேண்டியவர்கள்..! இவர்களது பிரசன்னம்  இம் மாநாட்டுக்கு முக்கியமானதாகும்.

மலையகத்தில் ஒரு கால் நூற்றாண்டு கால சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய ஓர் அரசியல் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவனாக இருந்தும், செயலாளனாக செயல்பட்டும் காலப் போக்கில் தலைமை குடை சாய்ந்து, அதுவும் சராசரி தேர்தல் கட்சியாகத் திசை மாறியதால், கட்சி அரசியலில் தோல்வியடைந்தவன் என்றாலும், சமூக அரசியலில் இன்று வரை  ஆதங்கத்தோடு செயல்பட்டு வரும் எனக்கும் உங்களின் இந்த புதிய முயற்சி, எமது சமூகத்தின் புதிய அரசியல் மாற்றத்தை பெற்றுத் தரும்  என்ற பூரண நம்பிக்கையுடன் இக் கடிதத்தை முடிக்கின்றேன்.

இப்படிக்கு,
மு.சிவலிங்கம்,                                             
(அரசியல், சமூக செயற்பாட்டாளர்)
56, ரொசிட்டா வீடமைப்புத் திட்டம்,                             
கொட்டகலை.
தொ. பே ..  051 2244090  -    077 5757202
மின்னஞ்சல் : moonaseena@yahoo.com