தொழிற்சங்க அரசியல்வாதிக்கு எதிராக
தடைச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்...
-மு.சிவலிங்கம்
உலக நாடுகள் அனைத்திலும் தொழிலாளர்களுக்கு தலைமை கொடுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அரச பதவிகளை எதிர்நோக்கி தேர்தலில் ஈடுபடுவதில்லை. அந்நாடுகளில் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அரசு பயப்படுவதில்லை. மாறாக தொழிற்சங்கங்களுக்கும்¸ தொழிற்சங்கவாதிகளுக்கு மட்டுமே பயப்படுகின்றன.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கும் சக்தி தொழிலாளரின் உழைப்பேயாகும். அவர்களின் நல உரிமைகளும்¸ வேதன உரிமைகளும் அரசினால் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு நாடு வளர்முக நாடாகவும்¸ முன்னேற்ற மடைந்த நாடாகவும் நிர்ணயிப்பது அந் நாட்டின் சகல துறையைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தின் உழைப்பேயாகும். ஆகவே¸ நாட்டின் நிமித்தம் தொழிலாளர்களின் சுக துக்கங்களுக்கான அதி விசேசமான பாதுகாப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதில் ஒரு முக்கியமான சட்டம்தான் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அரசியலில் ஈடுபடாதிருக்கும் தடைச் சட்டமாகும்.
அரசியல் கலப்பற்ற தொழிற்சங்கவாதிகள் எத்தனித்தால்¸ ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முடமாக்கிவிட முடியும். அந் நாட்டின் சகல இயக்கங்களையும் ஸ்தம்பிதமாக்கி விட முடியும். சந்தை பொருட்களின்¸ உள் நாட்டு உற்பத்திகளின் விலைவாசிகளை உயர்த்தி விட முடியும். ஓட்டுமொத்த குடி மக்களின் நுகர்வுகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்திவிட முடியும். இந்த நிலைமைகள் ஏற்படாது இருக்கவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து¸ மேலை நாட்டு அரசுகள் செவி சாய்க்கின்றன..
மேலும் படிக்க....