இன்றைய தமிழ் இலக்கிய உலகில் நம்மோடு மூத்தவராக வாழ்ந்துக் கொண்டிருக்கும் கி.ராஜ நாராயணன் அவர்கள் இன்று (16 Sep 2020) தனது 98 வது பிறந்த தினத்தில் தடம் பதிக்கின்றார். 2013 ம் ஆண்டு ஐயாவுடன் அவரது பாண்டிச்சேரி இல்லத்தில் இலக்கிய நண்பர்களுடன் கூடியிருக்கும் நினைவை பகிர்ந்துக் கொள்வதில் பெருமை கொள்கின்றேன். அவர் எனது "ஒப்பாரி கோச்சி" கதையை தமிழ் நாடு முழுவதும் பிரச்சாரத்துக்காக தீராநதி சஞ்சிகையில் மறு பிரசுரம் செய்ததை நன்றியுடன் நினைவு கொள்கின்றேன்....
அவர் நலமோடும்¸ மகிழ்வோடும் வாழ வாழ்த்துகின்றேன்.
-மு.சிவலிங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக